திருமணம் எல்லாம் ஆகல, ஆனால் நெற்றியில் குங்குமம் வைப்பது எதனால் – சனம் ஷெட்டி விளக்கம்.

0
16522
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

இதையும் பாருங்க : இளம் வயதில் பாலிவுட் பிரபலத்துடன் லிப் லாக் – வைரலாகும் குஷ்பூவின் புகைப்படம்.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல சனம் ஷெட்டி வனிதாவை போல வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை புடவை கட்டினால் அடிக்கடி நெற்றி நடுவே குங்குமம் வைத்து வழக்கம்.

இதை பார்த்த பலரும் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள். சனம் ஷெட்டிக்கு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருக்குமான தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் திருமணம் நின்று போனது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்க நெற்றியில் குங்குமம் வைப்பது குறித்து கூறியுள்ள சனம், எனக்கு திருமணம் நடைபெறஇல்லை. உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஒரு நாளில் நடக்கும். நெற்றியில் குங்குமம் வைப்பது என்னுடைய குடும்பத்தில் தவறு ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement