தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க உள்ளார் குஷ்பூ. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் – தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.
நடிகை குஷ்புவின் இளம் பருவத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதே போல நடிகை குஷ்பூ அப்போதே படு கிளாமராக கூட நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்பூ பாலிவுட் நடிகையான பிராஹாவுடன் லிப் லாப் லாக் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.