பிக் பாஸ் செல்லும் முன்னர் தன்னை ஏமாற்றிய தர்ஷனை சிக்கலில் மாட்டிவிட்டு சென்றுள்ள சனம் ஷெட்டி. என்ன செய்துள்ளார் பாருங்க.

0
27986
sanam
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகை சனம் ஷெட்டியின் ஒருவர். 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவம்பர் 12 ஆம் தேதி பெங்களூரில் பிறந்தவர். ஆரம்பத்தில் இவர் Tata Consultancy Services நிறுவனத்தில் Software Engineer – ஆக பணியாற்றி வந்தார். மாடல் துறையின் மீது இருந்த ஆராவதால் மாடலிங் துறையில் நுழைந்தார்.

-விளம்பரம்-
tharshan-sanam

மேலும், இவர் 2016 ஆம் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தில் வந்தார். அப்போது அந்த போட்டியில் மீரா மிதுன் தான் முதல் பரிசை வென்றார். ஆனால், மீரா மிதுன் சில மோசடி வேலைகளில் ஈடுபட்டதால். மீரா மிதுனின் அந்த பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆரம்பத்தில் இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்தார். சனம் ஷெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தார். இந்த ஆண்டு மட்டும் வால்டர், மஹா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். சனம் ஷெட்டி ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டது பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் மூலமா தான்.

தர்ஷன், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்த விஷயத்தை கூட சனம் அப்போது சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை சனம் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும்.

-விளம்பரம்-

ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கம் தொடரப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.

Advertisement