ஷிவானியை தொடர்ந்து விக்ரம் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிக் பாஸ் பிரபலம்.

0
1203
vikram
- Advertisement -

உலகநாயகன் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர் கமலஹாசன். தற்போது உலக நாயகன் கமல் அவர்கள் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில் இவர்கள் எல்லோரும் விக்ரம் பட ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் விக்ரம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்கள் தற்போது இணைந்து உள்ளார். இது குறித்து தற்போது சாண்டி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க : முதல் முறையாக அக்மார்க் நீச்சல் உடையில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

மேலும், அதில் அவர் கூறியிருப்பது, கமல் சாருடன் விக்ரம் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. இந்தப் படத்தில் நடன இயக்குனராக இருப்பது ரொம்ப சந்தோசம் மற்றும் இது என்னுடைய வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும் என்று அறிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர்களில் சாண்டி மாஸ்டரும் ஒருவர். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

Image

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது என்று சொல்லலாம். இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement