யுவன் ஷங்கர் ராஜைவையே செம குத்தாட்டம் போட வைத்த சாண்டி மாஸ்டர். அதுவும் எந்த பாட்டுக்கு பாருங்க.

0
156
YuvanConcert
- Advertisement -

முதல் முறையாக வெறித்தனமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனம் ஆடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

-விளம்பரம்-

இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

யுவன் இசை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தில் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’.

விருமன் படம்:

இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி இருக்கிறது. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது யுவன் அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டுடே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

வெறித்தனமாக நடனமாடிய யுவன்:

சமீபத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் வெறித்தனமாக யுவன் சங்கர் ராஜா நடனம் ஆடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நேற்று யுவன் சங்கர் ராஜாவின் காசர்ட் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

குவியும் வாழ்த்து:

இதில் திரையுலைகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடிக்கொண்டே வெறித்தனமாக நடமாடுகிறார். இதுவேது முதல் முறையாக இவர் பாடிக்கொண்டே நடனமாடி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சாண்டி மாஸ்டர் உடன் யுவன் நடனம் ஆடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் லைக்ஸ்களை குவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement