விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டொபர் 6 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவி டான்ஸ் ஷோ நடுவராக பங்கேற்ற சாண்டி பிக் பாஸ் 3யில் கலந்து கொண்டார். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் பாருங்க : ‘தல ரசிகர்களே இது உங்களுக்காக’ – அஜித்தை சந்தித்தது குறித்து சாதனை பெண் போட்ட பதிவு.
அந்த எபிசொட் ரசிகர்கள் மறக்க முடியாத எபிசோடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சாண்டி மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தன் மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் பேரை வைத்துள்ளார் என்றும் சாண்டி, ஷான் மைக்கேல் ரசிகர் போல என்றும் ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்களோ ட்ரிபிள் எச்னு வச்சிருக்கலாம்ல, ஜான் சீனானு வச்சிருக்கலாம்ல என்று தங்களுக்கு பிடித்த WWE வீரர்கள் பெயரை கூறி வருகின்றனர்.