சினிமா திரை உலகில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பத்தி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பிரபலமானவர் மாஸ்டர் சாண்டி. இவர் ஒரு திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சாண்டி அவர்கள் பிரபலமான நடன கலைஞர் கலா மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தான் அறியப்பட்டார்.
அதற்கு பின் இவர் சினிமா துறையில் நடன ஆசிரியராக மாறி உள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் சாண்டி இரண்டாம் இடத்தையும் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி கவினுடன் இணைந்து உருவாக்கிய ‘வி ஆர் தி பாய்ஸ்’ பாடல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
இதையும் பாருங்க : வனிதா-பீட்டர் திருமணம், காவல் ஆய்வாளார் மீது புகார் அளித்த பீட்டர் மனைவி. காரணம் இது தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் கூட சாண்டி பல முறை நடனமாடியுள்ளார். அதே போல சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேடிக்கையான சில வீடியோகளை கூட பதிவிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 5) சாண்டி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் சாண்டி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் குழந்தை போல இருக்கும் சாண்டி தனது பிறந்தநாளுக்கு கேக் கேட்டால் பட்டர் பிஸ்கெட்டை தண்ணியில் நனைத்து கொடுத்துள்ளார்கள் என்று வேடிக்கையாக கூறியுள்ளார். சாண்டியை போல தர்ஷனும் குழந்தை போல மாறி சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.