மேடையில் வெறித்தனம் பாடலுக்கு காலசைத்த ராகிங் ஸ்டார் யாஷ். வைரலாகும் வீடியோ.

0
2714
yash
- Advertisement -

கன்னட மொழியில் இருந்து எந்த படமும் தமிழ் மொழிக்கு டப் செய்து வெளியாவது அரிதாக ஒன்று. இந்நிலையில் தான் முதன் முறையாக ஒரு கன்னட படம் ஒன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது வேற ஒன்னும் இல்லைங்க நம்ம கன்னட நடிகர் யாஷ் நடித்த “கே ஜி எப்” திரைப்படம். இவர் கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். யாஷ் நடித்துள்ள இந்த “கே ஜி எப்” திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை செய்தது.

-விளம்பரம்-

நடிகர் யாஷ் அவர்கள் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த “கே ஜி எப்”படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இந்நிலையில் நடிகர் யாஷ் அவர்கள் விஜய்யின் ரசிகர் என்று ஒரு முறை கூறி உள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படமான “பிகில்” படத்தின் ஒரு ஹிட் பாடலுக்கு கால்களை அசைக்க நடிகர் யாஷ்க்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் தான் சென்னையில் விருது வழங்கும் விழா ஒன்று நடந்தது.

- Advertisement -

இதில் விஜய்யின் பிகில் படத்தில் இருந்து “வெறித்தனம்” பாடலுக்கு பிக் பாஸ் சீசன் 3 ரன்னரும், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் அவர்கள் ராக்கிங் ஸ்டார் யாஷ், கிரிக்கெட் வீரர் பிராவோ இருவருக்கும் நடனம் சொல்லி தந்து உள்ளார். பின் மூவரும் இணைந்து வெரிதானம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விருது விழாவில் நடிகர் யாஷ் அவர்கள் கூறியது, தமிழ் மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அதோடு அனைத்து தடைகளையும், கலாச்சார வேறுபாடுகளையும் உடைக்கும் சக்தி சினிமா ஊடகத்திற்கு உண்டு. அரசியல் மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது. திரைப்படங்களுக்கு எந்தவிதமான தடைகளும் இருக்கக்கூடாது.

Related image

-விளம்பரம்-

ஒவ்வொரு படத்தையும் ஒரு இந்திய படம் போலவே கருத வேண்டும். இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ் திரையுலகம் பெரிய அளவில் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறது. மேலும், கோலிவுட்டில் ஏராளமான திறமைமிக்க நபர்கள் உள்ளன. நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு தமிழக மக்களுக்கு நன்றி தான் சொல்ல முடியும். கேஜிஎஃப் படம் என் கனவு. அதோடு ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு அன்பைப் பெறுவது கடினமான ஒன்று. அதற்காக தமிழ் மக்களுக்கு இந்த தருணத்தில் நன்றி என்றும் நடிகர் யாஷ் கூறினார். மேலும், “கே ஜி எப்” படம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக படு மும்முரமாக நடைபெற்று வந்தது. மேலும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக ‘சஞ்சய்தத்’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement