அடுத்து கட்டத்திற்கு சென்ற கவின்..சாண்டி சொன்ன ரகசியம்.. ரசிகர்கள் குஷி..

0
25750
kavin-sandy

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் காதல்கள் , சண்டைகள்,சர்ச்சைகள் தான். மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆனார். மேலும்,இரண்டாம் இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து உள்ளார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள். அதோடு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட ரசிகர்களை தெறிக்கவிட்டுச்சு கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க இந்த பிக் பாஸ் சீசன் 3க்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.

Image result for sandy kavin

அதோடு இந்த பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சி இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். மேலும், இதில் பிக்பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் பங்குபெற உள்ளார்கள். அதோட பாய்ஸ் அணியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிஞ்ச உடனே எல்லாரும் அவங்கவங்க வேலைய பாக்க போயிட்டாங்கன்னு சொல்லலாம். நிகழ்ச்சி முடிஞ்சு உடனே முகென் மலேசியா சென்றார். லாஸ்லியா இலங்கை சென்று விட்டார். இந்த நிலையில் இவர்கள் அப்பப்ப ஒருவரை ஒருவர் சந்தித்து, போனில் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : பிகில் படத்திற்காக கிரேனில் கொக்கி மாட்டி தொங்கியும், மண்சோறு சாப்பிடும் ரசிகர்கள்..வைரல் வீடியோ..

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது “வி ஆர் த பாய்ஸ் ” என்ற பாடல் மூலம் உலக அளவில் உள்ள மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் பாய்ஸ் அணி. சாண்டி, தர்ஷன்,முகென்,கவின் தாங்க அந்த பாய்ஸ் அணி. விளையாட்டாக ஆரம்பித்த இந்த அணி இன்று விஸ்வரூப வெற்றி எடுக்கும் நிலையில் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் டிவி பிக் பாஸிலிருந்து பாய்ஸ் அணி சாண்டி, தர்ஷன்,முகென்,கவின் மட்டும் வரவழைத்து சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் முகென் பாட்டு பாடுகிறார். லாஸ்லியா,கவின், சாண்டி எல்லாம் நடனமாடுகிறார்கள். தர்சன்,ஷெரின் இருவரும் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

Image
Image

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சாண்டி, தர்சன் கலந்து கொண்டார்கள். மேலும்,கவின் எங்கே என்று பலரும் கேள்வி கேட்டனர். அப்போது சாண்டி அவரின் படம் குறித்து பிஸியாக உள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்புக்காக கவின் வெளிநாடு சென்றுள்ளார் என்று சாண்டி கூறினார். இதை கேட்டவுடன் கவின் ஆர்மி பயங்கர குஷி ஆயிட்டாங்க. அப்ப நம்ம கவினை திரை உலகில் தான் காண முடியும். கவின் மாஸ் காட்டுறிங்க என்று பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். அதோடு கவினை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement