சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் – பிரபல நடிகரின் பதிவு வைரல்.

0
384
sandy
- Advertisement -

சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று கார்த்தி பதிவிட்டுள்ள டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-
viruman

இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் வானம் கிடுகிடுங்க என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக சாண்டி பணியாற்றி இருந்தார்.

கார்த்தி பதிவிட்ட டீவ்ட்:

இந்த பாடலின் ஒரு காட்சியில் கார்த்தியை சாண்டி மாஸ்டர் பல்டி அடிக்க வைத்து இருப்பார். அதுவும் அதிகாலை இரண்டிலிருந்து மூன்று மணிக்கு இந்த காட்சி எடுக்கப்பட்டது. இதை இசை வெளியீட்டின்போதே கார்த்திக் கூறியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, நடுராத்திரி மூன்று மணிக்கெல்லாம் சம்மர் சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். உங்களை மன்னிக்கவே மாட்டேன். இனி ஊரெல்லாம் ஊர் திருவிழாவில் நம்ம பாட்டு கண்டிப்பாக இருக்கும் என்று கார்த்தி கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்தி நடிக்கும் படம்:

கார்த்தியின் இந்த கிண்டல் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாக இருக்கிறது.

சர்தார் படம்:

இதனைத் தொடர்ந்து கார்த்திக் தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் திரில்லர், அதிரடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Advertisement