விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.
மாஸ்டர் சாண்டி, நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சாண்டி தனது மகளை நினைத்து கண் கலங்கி அழுதார். ஆனால், மகள் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள சாண்டி ஏன் ஒரு மாத மகளை விட்டு வந்தார் என்பதை சாண்டியின் மனைவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறியுள்ளார்.
அதில், என் கணவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என்றவுடன் நாங்கள் அனைவரும் முதலில் வேண்டாம் என்று தான் கூறினோம் கூறினோம். ஆனால் , அவர் தான் தன்னிடம் ஒருத்தர் இதை வந்து கேட்டிருக்கிறார் என்னால் எப்படி மறுக்க முடியும். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் தனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார் அது எனக்கு சரியாக பட்டது அதனால் தான் நானும் சம்மதித்தேன் என்று கூறியுள்ளார்.