விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டொபர் 6 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம்.
இந்த சீசனில் ரன்னர் அப்பான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள்பலராலும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வந்தார். சாண்டி, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதர்க்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார்.
அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். சண்டிக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அவரது மகள் லாலா தான். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த எபிசொட் ரசிகர்கள் மறக்க முடியாத எபிசோடாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சாண்டி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலரும் சாண்டி மனைவியிடம் நார்மல் டெலிவரியா ? சிசேரியனா என்று கேட்டு வந்தனர். இதற்கு பதில் அளித்த அவர், டெலிவரி பற்றி கேட்டு எனக்கு பல மெசேஜ்கள் வருகிறது. ஏன் எல்லாரு என்னுடைய பிரசவத்தை பற்றி இவ்ளோ கவலைபடுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. குழந்தைக்கு எது நல்லது என்பது மருத்துவருக்கும் அம்மாவிற்கும் தெரியும் அல்லவா என்று பதில் அளித்துள்ளார்.