முகென் தான் ஜெயிக்க தகுதியுடையர்.! ரசிகரின் கமண்டால் கடுப்பான சாண்டியின் மனைவி.!

0
3345
sandy-mugen

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள 4 போட்டியாளர்களுக்கு ஆதரவுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

அதே போல தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 4 போட்டியாளர்களின் குடும்பத்தினரும் அவரவர் குடும்ப நபர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்த வண்ணம் இருகின்றனர். அந்த வகையில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சாண்டியின் மனைவியும் தனது ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

சொல்லப்போனால் சாண்டிக்கு மட்டுமல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார் சாண்டியின் மனைவி. மேலும், பிக் பாஸ் வீட்டில் வி ஆர் தி பாய்ஸ் என்ற ஒரு கேங் உருவான போது அவர்கள் 5 பேருக்கு மட்டும் சாண்டியின் மனைவி டி -ஷர்ட்டுகளை கூட பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். சாமீபத்தில் சாண்டிக்கு ஆதரவு அளிக்குமாறு தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

-விளம்பரம்-

அதில் , சாண்டிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார் சாண்டி மனைவியின் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், .பட்டத்தை வெல்ல முகென் தான் தகுதியுடையவர். அவர் பன்முக திறமை கொண்ட நபர். எனவே, அவர் தான் இந்த சீசனில் வெற்றி பெற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டியின் மனைவி, உங்களுக்கு முகெனை பிடிக்கும் என்றால் ஆதரவளியுங்கள். அதற்காக அடுத்தவர்களை குறைத்து கூற வேண்டாம். உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு நீங்கள் ஆதரவு அளியுங்கள் என்று கூறியுள்ளார் .

இந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement