விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.
அன்பறிவு இயக்குனரும் சஞ்சீவ்வும் :
இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அவரது சகோதரி பற்றியும் அவரும் ஒரு நடிகை தான் என்பதை பற்றியும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘அன்பறிவு’ படக்குழு வந்திருந்தனர். அப்போது இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் தான் சஞ்சீவின் உறவினர் என்று கூறி இருந்தார்.
அக்கா மகளை நினைத்து கலங்கிய சஞ்சீவ் :
அப்போது பேசிய சஞ்சீவ், என் அக்கா இறந்த பின்னர் என்னுடைய அக்கா பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்பு எனக்கு இருந்தது. அஸ்வினை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அவருடைய அக்கா வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சிந்து தான் தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான ஷியாமளா மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சிந்து.
சஞ்சீவின் அக்கா சிந்து :
தமிழில் இணைந்த கைகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி, கிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவர் இறந்த பிறகு தான் வெளியே வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடையுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.. இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார் அதிலும் இவர் மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். இவர் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். இவர் சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப நல்ல, தங்கமான மனிதர். இவர் 1995 ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அஸ்துமா பிரச்சனை :
பின் இவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. இருந்தும் இவர் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்து இருக்கிறார். மேலும், இதற்காக இவர் பல்வேறு விதமான சிகிச்சை பெற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் 2004ஆம் வருடம் டிசம்பர் 26ஆம் தேதி தமிழகத்தையே புரட்டிப் போட்ட சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியினால் பல ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு பலரும் உதவி செய்தார்கள். அப்போது நடிகை சிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டினார்.
9 வயதில் அம்மாவை இழந்த அக்கா மகள் :
இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை இருந்ததும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அப்போது நீண்ட தூரம் நடந்ததால் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின் இவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தும் சிகிச்சை பயனளிக்காமல் சிந்து இறந்தார். அப்போது சிந்துவுக்கு 33 வயதுதான் இருந்தது. சிந்து இறக்கும் போது அவரது மகளுக்கு வெறும் ஒன்பது வயது தான் அப்போது முதல் தன்னுடைய அக்கா மகளுக்கு ஒரு தந்தை தானத்தில் இருந்து அனைத்தையும் கவனித்து வந்தவர் சஞ்சீவ்