சஞ்சீவ்க்கு ஓட் போட சொல்லி எல்லருக்கும் மெசேஜ் அனுப்ப சொல்ல விஜய்கும் அனுப்பிட்டேன். அத அவர் பாத்துட்டு – ப்ரீத்தி

0
1577
vijay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

விஜய் சஞ்சீவ் நட்பு :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நடிகர் சஞ்சீவ், இளைய தளபதியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த சந்திரலேகா படம் துவங்கி இறுதியாக வெளியான ‘மாஸ்டர்’ படம் வரை விஜயுடன் பல படங்களில் நடித்துள்ளார் சஞ்சீவ். ஆனால், எந்த இடத்திலும் விஜய்யின் பெயரை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்தியது இல்லை சஞ்சீவ்.

இதையும் பாருங்க : நல்லவளா நடிச்சிருக்கேன், கெட்டவளா நடிச்சிருக்கேன், ஆனால் இப்படி ஆடியிருப்பது – ஊ சொல்றியா மாமா குறித்து சமந்தா.

- Advertisement -

சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி :

அதே போல சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி ஆன போதே மாஸ்டர் படத்தில் சஞ்சீவுடன் நடித்த சிபி, விஜய் சார் பிக் பாஸ் பார்க்கிறாரா என்று கேட்டதற்கு கூட எதையும் சொல்லவில்லை சஞ்சீவ். ஆனால், சஞ்சீவ் பங்கேற்ற பல பேட்டிகளில் விஜய்க்கும் தனக்கும் இருக்கும் தனிப்பட்ட நட்பு குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

சஞ்சீவ்க்கு வாக்களிக்கும் விஜய் :

அதில், அவர் பிக்பாஸ் போனதில் இருந்தே விலை உட்பட ஒரு நாளைக்கு ஒரு மூன்று பேராவது எனக்கு கால் செய்து நலம் விசாரித்து விடுவார்கள் அதேபோல என் கணவருக்கு வாக்களிக்கச் சொல்லி அனைவருக்கும் மெசேஜ் அனுப்பும் போது அவருக்கும் அனுப்புவேன் அவர் அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக செய்றேன்மா கவலை படாதீர்கள் என்று விஜய் கூறியதாக ப்ரீத்தி கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் டிக் டாக் பிரபலமும் பீஸ்ட் பட நடிகையுமான காயத்ரி ஷான் கலந்துகொள்வதாக இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வாய்ப்பை தவறவிட்ட பீஸ்ட் நடிகை :

ஆனால், அவர் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அப்போது அவர் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது, பீஸ்ட் படத்தில் நடிப்பது, அதுவும் விஜய் சாருடன் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இந்த தகவல் படக்குழு அனைவருக்குமே தெரியும்.

விஜய் பிக் பாஸ் பார்ப்பது குறித்து காயத்ரி ஷான் :

இதை பற்றி கேள்வி பட்ட விஜய் சார் என்னிடம் வந்து, கமல் சார் நிகழ்ச்சி தானே, போறீங்களா? ஓகேவா? நான் நிகழ்ச்சியை அவ்வளவா பார்ப்பதில்லை. நீங்கள் செல்கிறீர்கள் என்றால் நான் கண்டிப்பாக பார்ப்பேன். என்னுடைய 50 ஓட்டும் உங்களுக்கு தான் என்று கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பின் அடுத்த நாள் வந்த உடனே என்ன முடிவு செய்தீர்கள் என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். நான் செல்லவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் சரி ஓகே என்று சொல்லி சென்றுவிட்டார் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement