இந்த மாதிரி நடந்துக்காதீங்க. மதுமிதாவை தொடர்ந்து சம்பள பிரச்சனை குறித்து பேசியுள்ள சரவணன்.

0
31618
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது . கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு தான் வந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வருகிறது. இதில் சரவணனின் வெளியேற்றம் தான் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
saravanan

ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ். இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள்.

இதையும் பாருங்க : நயன்தாராவின் டாட்டூவை போலவே கையில் டாட்டூ குத்தி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். அதில், நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோது என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். இதற்கு முந்தைய வருடங்களில் இந்த நிகழ்ச்சி சிலருக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை நம்பித்தான் நானும் போனேன். ஆனால், அதன் பின்னர் தான் தெரிய வந்தது அது மிகப்பெரிய போங்காட்டம் என்று. எனக்கு இயல்பை மீறி நடக்க தெரியாது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் என்ற பெரிய நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், அவப் பெயருடன் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.

ஆனால், சிறிது நாட்கள் கழித்து மக்கள் என்னை புரிந்து கொண்டார்கள் என்று தகவல் வந்தபோது கொஞ்சம் திருப்தி அடைந்தேன். இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு மிகப் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் மக்கள் சரவணனை மீண்டும் நினைக்க செய்தது இந்த நிகழ்ச்சிதான் அதற்கு நான் நன்றி சொல்ல மறக்க மாட்டேன். மேலும், சம்பளம் குறித்து பேசியுள்ள அவர், நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எனக்கு வருத்தம் அளித்தாலும் நான் போட்ட ஒப்பந்தத்தை நான் மீறவில்லை. 100 நாள் காத்திருந்த பின்னர் தான் சம்பளத்தை கேட்டேன். ஆனால், அப்போது கூட ஒரு சில நாட்கள் அலைய விட்டார்கள். ஜிஎஸ்டி, அதுஇது என்றெல்லாம் காரணத்தை சொல்லி கடைசியாக ஒரு வழியாக வாங்கிவிட்டேன்.

-விளம்பரம்-
madhumitha

ஆனால், கடந்த சீசன்களிலும் சரி, இந்த சீசனிலும் சரி சிலர் அடம்பிடித்து மறுநாளே சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் உள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் ஒப்பந்தம் என்பது எதற்கு. மொரண்டு புடிச்சா சம்பளம் உடனே போகுது ஆனால், பேசாமல் இருந்தால் ஏமாளியா, என்ன நியாயம் இதெல்லாம் ? நான் இந்த நேரத்தில் சேனலை கேட்டுக்கொள்கிறேன், இனிவரும் காலத்திலாவது இந்த மாதிரி நடந்துக்காதீங்க என்று கூறியுள்ளார் சரவணன். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பள பிரச்சனை குறித்து மதுமிதா கொடுத்த பேட்டிகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement