தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாட்டில் ஊர் சுற்றி வருகின்றனர். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்த விஷயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்
ஆரம்பத்தில் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து விட்டார். அதன் பின்னர் திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வந்தார். இதனால் பிரபுதேவாவின் குடும்பத்திலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. பிரபுதேவா மீது இருந்த அதீத காதலால் நயன்தாரா பிரபுதேவா பெயரை தனது கையில்’பிரபு’ என்று பச்சை குத்திக் கொண்டார். பின்னர் பிரபுதேவாவுடன் தனது காதலை முறித்துக் கொண்ட நயன்தாரா பின்னர் தனது கையிலிருந்த ‘பிரபு’ என்ற டாட்டூவை ‘பாசிட்டிவிட்டி’ என்று மாற்றிக் கொண்டார்.
இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த சாக்க்ஷி அகர்வால்.
இந்த நிலையில் நயன்தாரா கையில் குத்திக்கொண்டு இருக்கும் ‘பாசிட்டிவிட்டி’ என்ற அதே டாட்டூவை தனது கையில் குத்திக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி படத்தின் நாயகியான தான்யா ரவிச்சந்திரன். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் தமிழில் பழம் பெரும் நடிகையான ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. கருப்பன் படத்திற்கு பின்னர் சிபி ராஜுடன் ‘மாயோன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளிவராமல் தான் இருக்கிறது. இதை தவிர இவருக்கு வேறு எந்த படத்தின் வாய்ப்பும் வரவில்லை.