தவறு என கண்டித்த கமல் .! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்.!

0
4806
Cheran-Saravanan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சரவணன் மற்றும் சேரனுக்கு இடையில் நடந்த சண்டை பிக் பாஸ் வீட்டையே கதற விட்டது. இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது சேரன், சரவணின் பெயரை மோசமாக டாஸ்க் செய்தார் என்று கூறிவிட கடுப்பான சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசியிருந்தார்.

அதன் பின்னர் சரவணன் கூட தான் விஜயகாந்த் போல நடந்து கொள்ளவில்லை என்று கூற, ஆரம்பித்து சண்டை. சேரனின் கேள்விக்கு பதில் கூறிய சரவணன், நீங்கள் ரஜினி கெட் டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறினார். இதே போல இருவரும் வாக்கு வாதம் செய்துகொண்டே இருந்தனர்.

- Advertisement -

பின்னர் சாண்டி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் ஏன் தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு என்று கூறினார் சரவணன். பின்னர் ஏன் வாடா போடா என்று கூறினீர்கள் என்று சரவணனிடம் கேட்க, நான் தர்ஷனை தான் சொன்னேன் நீங்கள் வேண்டுமானால் வீடியோ போட்டு பாத்துக்கோங்க என்று கூறினார் சரவணன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement