இந்திய தமிழ் திரைப்பட துறையில் 80, 90 களில் தமிழ் படங்களில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். அதுமட்டுமில்லாமல், தற்போது வந்த நந்தா, பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டார்.மேலும் அவர் தனது கல்லூரி காலத்தில் பெண்களிடம் கிண்டல் செய்ததன் காரணமாக திடீரென்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரை வெளியேற்றியது. இந்த சம்பவத்தின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்காக சமூக வலைத்தளங்களில் சரவணனை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர அனுமதி தாருங்கள் என்று பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே அவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது திரைப்பட மானிய தேர்வு குழுவில் ஒருவராக தமிழக அரசு கௌரவப்படுத்தும் வகையில் சரவணணனை தேர்வு செய்யப்பட்டு பதவி வழங்கியுள்ளது. அது என்ன? திரைப்பட மானிய குழு என்று பலரும் வினவிய போது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வரும் தரமான திரைப்படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த திட்டம் கடந்த சில வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது உண்மை தான்.
இதையும் பாருங்க : நான் தல குனிஞ்சி வாழ கூடாது.! கவிலியா காதலை ஏற்க மறுத்த லாஸ்லியாவின் தந்தை.!
இதற்காக வருடம் வருடம் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு தான் மானியம் வழங்கப்படும். அந்த வகையில் 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு மானியம் வழங்க தகுதியான திரைப்படம் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது தமிழக அரசு. அந்தக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் என்பவரை குழுவின் தலைவராகவும்,குழுவின் உறுப்பினர்களாக இயக்குனர் ஆர் வி உதயகுமார், வசனகர்த்தா லியாகத் அலிகான், நடிகர் சரவணன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர்.
இந்த குழுவில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படும் படங்களுக்கு மட்டுமே 7 லட்சம் மானியம் பெற தகுதி உள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்தது. அதாவது அந்த படங்கள் குறைந்த செலவிலும் , ஒரு படத்துக்கு(8 பிரதிகள் இருந்து 25 பிரதிகள் வரை) இருக்க வேண்டும்.மேலும் 35 மில்லிமீட்டர்/ சினிமாஸ் கோப்பில் 3000 மீட்டர் நீளத்துக்கு குறையாமல் தயாரிக்கப்பட்டு இருக்கும் படங்களுக்கு தான் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
மேலும் தமிழக அரசு, இந்த திரைப்பட மானியம் திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடங்கியது. 2007 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான படங்களில் 149 படங்களை தேர்வு செய்துள்ளது. அதில் ஒவ்வொரு படத்திற்கும் தலா 7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய்களை கடந்த ஆண்டுகளில் வழங்கியுள்ளார்கள். தற்போது 2015, 2016, 2017 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம் வழங்க திரைப்பட மானிய குழு ஒன்றை தேர்வு செய்து உள்ளது தமிழக அரசு. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த சில நாட்களில் இருந்தே எனக்கு சந்தோஷமான செய்திகளும், அதிர்ஷ்டமும் அடிக்கிறது என்றும் இதனால் மிக்க மகிழ்ச்சியுடனும்,வியப்பிலும் உள்ளளேன் என்று தெரிவித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் சித்தப்புக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.