பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன்.! அதிர்ச்சியான காரணம் இது தான்.!

0
19117

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரை சித்தப்பு என்று அழைத்து மிகுந்த மரியாதையையும் வைத்துவந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கமல் பேசி கொண்டிருக்கும் போது . சரவணன் ‘நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்’ என்று கூறினார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்களை குறித்து இப்படி பேசியதால் சரவணன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதனால் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சரவணனை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் சரவணனின் இந்த கருத்திற்கு நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னார். இதனால் அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று சரவணனை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், நீங்கள் பெண்களை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளளது. நீங்கள் மன்னிப்பு கேட்ட போதிலும் கடந்த வாரம் சேரன் மற்றும் மீரா விடயத்தில் கவனம் செலுத்தியதால் உங்கள் விடயத்தை கவனிக்க முடியவில்லை. எனவே, இந்த வாரம் நீங்கள் வெளியேற்ற படுகிறீர்கள் என்று சரவணன் காண்பேசன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
Advertisement