கணவருக்கு இரண்டாம் திருமணம்.! சரவணன் தியாக மனைவியை பார்த்துள்ளீர்களா.!

0
18708
Saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சரவணனும் ஒருவர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இவர் தான் பலரின் பேவரைட்டாக இருந்து வருகிறார்.

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தனது மனைவி குறித்து பேசிய சரவணன் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதில் தனது முதல் மனைவி குறித்தும் இரண்டாம் மனைவி குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் சரவணன்.

- Advertisement -

அந்த டாஸ்கின் போது தனது குடும்பத்தைப் பற்றி நடிகர் சரவணன் பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது. முதல் மனைவி இருக்கும் போது வாரிசுக்காக, தன்னை ஆண்மகன் என்று நிரூபிப்பதற்காக 2ஆவது திருமணம் செய்து கொண்டு தன்னை ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டேன்னு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் சரவணன்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற சரவணனின் முதல் மனைவி சூர்யா பேசுகையில். நானும் சரவணனும் அடையார் பிலிம் நிறுவனத்தில் தான் ஒன்றாக சந்தித்தோம் எங்கள் திருமணம் காதல் திருமணம் தான். பெற்றோர்களின் பல எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், எனக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கவில்லை..

-விளம்பரம்-

இதனால் சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு சென்றேன். இறுதியாக என் கணவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதால் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதை எல்லாம் மீறி இரண்டாம் திருமணத்தை செய்து வைத்தேன் அவரது திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் நானே தான் செய்வேன் என்று கூறியுள்ளார் சூர்யா.

Advertisement