தன் பட்டத்தை பயன்படுத்தியதாக எஸ் ஏ சியிடம் கேட்ட சரவணன். அதன் பின்னர் சினிமா வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த கதி.

0
895
Vijay
- Advertisement -

பொதுவாக நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைத்தால் அது யாருக்கும் கொடுக்காத பட்டமாக தான் இருக்கும். ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் தளபதி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இளைய தளபதி விஜய்’க்கு கிடைத்த இந்த ‘இளைய தளபதி ‘ என்ற பட்டம் முதன் முதலில் நம்ம சித்தப்பு, பிக் பாஸ் சரவணனுக்கு தான் இருந்ததாம் என்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். தமிழ் சினிமாவில் கருப்பான ஹீரோக்களும் கலக்கிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் சரவணன், சரவணன் நடித்த ‘நல்லதே நடக்கும்’ என்ற படத்தின் டைட்டில் கார்ட் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-46.png

அதில் சரவணனுக்கு ‘இளைய தளபதி’ என்ற பட்டத்துடன் இருந்தது அவரது பெயர். இதுகுறித்து சரவணனிடம் பிரபல பத்திரிக்கை பேட்டி எடுத்த போது, சரவணன் கூறியுள்ளதாவது. 90-களின் இடைப்பட்ட காலம் இருக்கும், நம்ம ஊரில் இருந்து ஒருத்தன் சினிமாவிற்கு போய்யிருக்கான் என்று எனக்கு சேலத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில்  சேலம் தி.மு.க-வுல பெரிய ஆள் வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.

- Advertisement -

சேலத்தில் தளபதி மாதிரி சுத்திக்கிட்டிருந்த தம்பி சரவணன் சினிமாவுக்குப் போயிருக்கார். சினிமாவுக்குன்னு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் வேண்டாமா? `தளபதி’ன்னே பட்டம் தந்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, சென்னையில ஏற்கெனவே ஒரு தளபதி (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டாராம்) இருக்குறதால, இவருக்கு `இளைய தளபதி’ன்னு கொடுத்துடலாம்’னு முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான்  என்று கூறியுள்ளார் சரவணன்.

This image has an empty alt attribute; its file name is vikatan%2F2020-05%2Fbe3be258-dabb-4058-a3f1-30cb824ce2dc%2Fsac.gif

மேலும், பேசிய அவர், அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான் நடித்து வெளியான படம் `நல்லதே நடக்கும்.’ அந்த படம் டைரக்டர் கே.சங்கர் சாருக்கு அது 100-வது படம். முதன்முதல்ல டைட்டில் கார்டுல `இளைய தளபதி’ சரவணன்னு போட்டாங்க. அதன் பின்னர் நான் நடித்த படங்களில் ‘இளைய தளபதி’னு போட ஆரம்பித்தேன். நல்ல போய்க்கொண்டு இருந்த எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

-விளம்பரம்-

பட வாய்ப்புகள் குறைஞ்சதால இந்தப் பட்டத்தை நானும் அப்படியே மறந்துட்டேன். இந்தச் சூழல்லதான் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடித்த ஒரு படத்துல அவருடைய பெயருக்கு முன்னாடி `இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ஷாக். உடனே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம். அதற்கு அவர், `உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார். என்ன நினைச்சு அவர் சொன்னாரோ, எனக்கும் அதுக்குப் பிறகு படங்கள் அமையலை. அதனால நானும் அப்படியே ஒதுங்கிட்டேன். 

Advertisement