சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சித்தப்பு சரவணன் நடித்தது குறித்து அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த. இது அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் Showcase வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடித்துள்ள சரவணன் அப்போதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர். இந்நிலையில் சரவணன் அவர்களின் நண்பர்கள் ரஜினியுடன் நடிப்பதை பற்றி தகவல் தெரிந்து அவர்கள் கூறியது என்னவென்றால் சரவணன் பள்ளி வயதில் இருந்த ரஜினியின தீவிர ரசிகராக இருந்தவர் பின்பு ரசிகர் மன்றத்தில் இணைந்து தன்னை முழுமையாக ரசிகர் மன்றத்துக்காகவே அர்ப்பணித்து கொண்டவராம்.
ரஜினி படம் வெளியாகிறது என்றால் போதும் அன்றைய தினம் சரவணன் அலப்பறைகள் தாங்க முடியாதாம் இவ்வாறு ரசிகர் மன்றத்தில் முழுதாக தன்னை அர்ப்பணித்தவர் பின்பு அதே மன்றத்துக்கு தலைவராக பொறுப்பேற்றாராம். பின்பு ரஜினி மன்றத்தின் தலைவரான சரவணன் தலைமையில் மன்றம் செயல்பட்டது. பின்பு ரஜினியின் மன்றத்திற்கு தலைவரான சரவணன் ரஜினி படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே அவரது தலைமையிலான சங்கம் செய்யும் அட்டுழியங்களுககு அளவே இல்லையாம்.
https://www.youtube.com/shorts/OCPDa0npzeQ
மேலும் ஜெய்சங்கர் துடிக்கும் கரங்கள் பட ரிலீசின் போது ஜெய்சங்கர் ரசிகர்களுக்கும் சரவணன் சங்கத்திற்கும் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம் இவ்வாறு இப்படிப்பட்ட நிலைமையில் இருந்து பின்னர் படங்களின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்த பிறகு ரசிகர் மன்றத்தின் கௌாவரவ ஆலோசகர் பதவிக்கு மாறினார். பின்பு இப்போது சரவணன் அவரது தலைவன் படத்திலேயே நடிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.





