சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி TO ரஜினி உடன் நடிக்கும் வாய்ப்பு – மகிழ்ச்சியில் சரவணன்

0
531
saravanan
- Advertisement -

ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
saravanan

ஜெயிலர் படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள். இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவிற்கு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்குமாறு ஐஸ்வர்யாராயை படக்குழுவினர் அணுகி இருந்தனர். இருந்தாலும் அவர் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் நெல்சன் உறுதியாக இருக்கிறார். அதனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

- Advertisement -

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி
ரஜினி படத்தில் :-

இந்நிலையில் ஜெய்லர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் படத்தின் குழுவினர்கள் யார் யார் எந்த பணி செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவந்தனர். இதில் சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சரவணன் என்பவர் இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி என்றாலே கண்டிப்பான முறையில் ரஜினியின் தீவிர ரசிகரா தான் இருக்க முடியும். அப்படி ரஜினியை தன் தலைவனாக ஏற்றுக் கொண்டவர் ரஜினியுடன் நடிக்க போகிறார் என்று செய்தி இப்போது வெளிவந்துள்ளது.

பருத்தி வீரன் சித்தப்பா :-

அது வேறு யாரும் இல்லை அமீர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற படத்தில் கார்த்தி உடன் துணை கதாநாயகராக அவரின் சித்தப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சரவணன். இவர் பருத்திவீரன் மட்டும் இல்லாமல் தமிழில் பல படங்களில் நடித்தவர் ஆனால் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் பருத்திவீரன், புரூஸ் லீ, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்திருப்பார். சினிமாவில் பல படங்களில் நடித்திருந்ததால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர் மன்றம் தலைவராக சரவணன் :-

இந்நிலையில் சரவணன் அவர்களின் நண்பர்கள் ரஜினியுடன் நடிப்பதை பற்றி தகவல் தெரிந்து அவர்கள் கூறியது என்னவென்றால் சரவணன் பள்ளி வயதில் இருந்த ரஜினியின தீவிர ரசிகராக இருந்தவர் பின்பு ரசிகர் மன்றத்தில் இணைந்து தன்னை முழுமையாக ரசிகர் மன்றத்துக்காகவே அர்ப்பணித்து கொண்டவராம். ரஜினி படம் வெளியாகிறது என்றால் போதும் அன்றைய தினம் சரவணன் அலப்பறைகள் தாங்க முடியாதாம் இவ்வாறு ரசிகர் மன்றத்தில் முழுதாக தன்னை அர்ப்பணித்தவர் பின்பு அதே மன்றத்துக்கு தலைவராக பொறுப்பேற்றாராம். பின்பு ரஜினி மன்றத்தின் தலைவரான சரவணன் தலைமையில் மன்றம் செயல்பட்டது.

சங்க தலைவனின் சம்பவங்கள் :-

பின்பு ரஜினியின் மன்றத்திற்கு தலைவரான சரவணன் ரஜினி படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே அவரது தலைமையிலான சங்கம் செய்யும் அட்டுழியங்களுககு அளவே இல்லையாம். மேலும் ஜெய்சங்கர் துடிக்கும் கரங்கள் பட ரிலீசின் போது சங்கர் ரசிகர்களுக்கும் சரவணன் சங்கத்திற்கும் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம் இவ்வாறு இப்படிப்பட்ட நிலைமையில் இருந்து பின்னர் படங்களின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்த பிறகு ரசிகர் மன்றத்தின் கௌாவரவ ஆலோசகர் பதவிக்கு மாறினார். பின்பு இப்போது சரவணன் அவரது தலைவன் படத்திலேயே நடிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

Advertisement