விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு பல்வேறு அமுலி துமுளிகளுடன் நிறைவடைந்தது . கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு தான் வந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வந்தது.
இதில் சரவணனின் வெளியேற்றம் தான் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ்.
இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். இதுகுறித்து பேசிய சரவணன் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோது என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். இதற்கு முந்தைய வருடங்களில் இந்த நிகழ்ச்சி சிலருக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை நம்பித்தான் நானும் போனேன்.
ஆனால், அதன் பின்னர் தான் தெரிய வந்தது அது மிகப்பெரிய போங்காட்டம் என்று. எனக்கு இயல்பை மீறி நடக்க தெரியாது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் என்ற பெரிய நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், அவப் பெயருடன் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் சரவணன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.