பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் சித்தப்பு என்று அன்போடு அழைக்கபட்ட சரவணன் கடந்த வாரம் திங்கள் கிழமை., எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சரவணன் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசி இருந்ததால் அவரை வெளியேற்ற சேரனின் ஆதரவாளர்கள் பிக் பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர் என்றும், கமலை சரவணன், கோர்த்து விடுறேன் என்று கூறியதால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : கவினை சொன்னால் மட்டும் லாஸ்லியாவிற்கு எவ்ளோ கோவம் வருது பாருங்க.!
சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை சாண்டி மற்றும் கவின் தான் எப்போதும் சரவணனுடனே இருந்தனர். கவினை விட சாண்டி தான் சரவணன் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார். சரவணன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் சரவணனை தான் மிஸ் செய்கிறேன் என்று கண்கலங்கி அழுதார் சாண்டி.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் பேட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த ஒரு பேட்டியிலும் சரவணன் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சரவணன் சாண்டியின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டியின் மகளை கையில் ஏந்தியபடி இருக்கிறார் சரவணன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.