‘அப்படி தாண்டா பேசுவேன்’ பிக் பாஸ் வீட்டில் சேரனை திட்டியது குறித்து பேசி கலங்கிய சரவணன்.

0
782
saravanan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரவணன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பருத்தி வீரன் என்ற படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.இந்த படத்தில் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம்புலி உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கூட்டுக்குடும்பத்தின் உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் மையமாக கொண்ட கதை. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை தொடர்ந்து குடும்ப பின்னணியில் அடுத்ததாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. அதில் சரவணன் அவர்கள் சேரன் குறித்து உணர்ச்சிகரமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சரவணன், சேரன் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே பெரிய பிரச்சினை வந்தது. ஸ்டார்களை இமிடேட் செய்து நடனமாட வேண்டும். அப்போது சேரன் அவர்கள் சரவணனை பார்த்து நீங்கள் விஜயகாந்த் போல் கொஞ்சம் கூட தெரியவில்லை என்று கூறுகிறார்.

உடனே கோபம் அடைந்த சரவணன் சேரனை லூசு, நீங்கள் ரஜினிகாந்த் கெட்டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று விமர்சித்திருந்தார். இந்த விஷயம் அப்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரவணன் அவர்கள் சேரன் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நாங்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். உலகமே எங்களை எதிரிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள் ஆகிவிட்டோம்.

வீடியோவில் 2 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் எனக்கு அன்பான தம்பி கிடைத்தார் என்பதை பெருமையாக சொல்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் சேரன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கோவிலுக்கு சென்று அங்கிருந்து என்னை தொலைபேசியில் அழைத்தனர். இந்த படத்தை என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. அந்த அளவிற்கு எனக்கு உறவுகள் கிடைத்திருக்கிறது. அதோடு இந்த படம் என்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்று கண்ணீர் மல்க மேடையில் பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement