சரவணன் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஒட்டுமொத்த படக்குழு.. வைரலாகும் புகைப்படம்..

0
5444
saravanan-son
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சரவணன். இவர் 90களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.மேலும்,சரவணன் அவர்கள் 1990 லிருந்து 2000 வரை தான் சினிமாவில் நடித்திருந்தார். இவரை அதிகமாக ‘சேலம் சரவணன்’ என்று தான் அழைப்பார்கள். அதற்கு பின் பருத்திவீரன் படத்திலிருந்து ‘சித்தப்பு’ என்று தான் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.அதற்குப் பின்னர் சரவணன் சில காலமாகவே சினிமா துறையிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். மேலும்,கார்த்திகின் பருத்திவீரன் படத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்திருந்தார். இந்த நிலையில் சரவணன் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-
saravanan Son

அவர் தன்னுடைய இளம் பருவத்தில் பெண்களை கிண்டல் செய்தார் என்று பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியது.இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகுதான் அவருடைய வாழ்க்கை மாறியது என்று கூட சொல்லலாம் .ஏனென்றால் தொடர்ந்து விருதுகளும், பதவிகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில் அவருக்கு படத்தில் நடிக்க படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் நடிகர் சரவணன் அவர்கள் தேனியில் ‘மருத’ என்கிற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அது மட்டும் இல்லைங்க சரவணனின் மகன் தீரஜ் கிர்த்திக்கு அக்டோபர் 14ம் தேதி அதாவது நேற்று பிறந்த நாள்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் ஈர உடையில் போஸ் கொடுத்த ரம்யா.. இவரா இப்படி..

- Advertisement -

அதனால நம்ம நடிகர் சரவணன் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தீரஜ் கிர்த்தி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்தார். இதுகுறித்து சரவணனிடம் கேட்டபோது அவர் கூறியது, பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை இயக்கி ஹீரோவா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார்கள். நானும்,நடிகை ராதிகாவும் இந்த படத்தில் அண்ணன், தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறோம்.அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தேனி மாவட்டம் சுற்றியும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் என் பையனோட பிறந்த நாள் வந்தது. மேலும், என் பையன் பிறந்த நாளை மிஸ் பண்ணிட கூடாது என்று ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன்.

saravanan
saravanan

ஆனா,என் குடும்பமும் ,படக்குழுவினரும் எனக்கு பயங்கரமான இன்ப அதிர்ச்சியை அளித்தார்கள்.அது , என் குடும்பத்தார்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் மகனை அழைத்துக் கொண்டு திடிரென்று வந்துட்டாங்க.உடனே நாங்க அனைவரும் அங்கேயே நடிகை ராதிகா முன்னாடி என் மகனுக்கு கேக் வெட்டி சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடினோம். என்னவோ ரொம்ப வருஷமா சினிமா துறையை விட்டு விலகி இருந்த மாதிரி இருந்தது. ஆனால், இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியின் மூலம் அந்த ஃபீலிங் எல்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சரவணன் கூறினார். மேலும், சரவணன் மகனின் பிறந்த நாள் குறித்து பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-
Advertisement