பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் சக்கை போடு போட்டது நாம் அறிந்ததே. 100 நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிந்த்துவிட்டதே என வருத்தப்பட்டவர்களும் உண்டு. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன்-2 குறித்த செய்திகள் தற்போது வெளியில் வர துவங்கியுள்ளன.
சீசன்-2வில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்றொரு புகை படம் சமூக வலயத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது.
அதன் படி நடிகர் ரியாஸ், ரச்சிதா, தொகுப்பாளினி DD , நடிகை ரம்பா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, மைனா நந்தினி, புன்னகை அரசி சினேகா, சரவணன் மீனாட்சி புகழ் ஸ்ரீஜா உள்ளோட்டர் கலந்துகொள்ளப்போவதாகவும்.
மேலும் சரவணன் மீனாட்சி புகழ் ரியோ, வடிவேலு பாலாஜி. கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா ஆகியோரும் கலந்துகொள்ளப்போவதாக அந்த புகை படம் கூறுகிறது.
எது எப்படி இருந்தாலும், விஜய் டிவி இடம் இருந்து அதிகார போர்வமான அறிவிப்பு வந்தால் தான் எது உண்மை எது வதந்தி என தெரியவரும். அது வரை காத்திருப்போம்.
பிக் பாசிற்கு பிறகு சினேகன் பேசிய முதல் வீடியோ