பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 ஸ் நடிகர்.! வெளியான புதிய தகவல்.!

0
791

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இந்த மாதம் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோ விடீயோக்களை விஜய் டிவி வெளியிட்டிருந்தது.

Related image

கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியினையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் ஓகே ஓகே படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 90ஸ் நடிகர் ராம்கி கலந்து கொள்ளப்போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 90 நடிகரான வையாபுரியும் இரண்டாவது சீசனில் 90 ஸ் நடிகரான பொன்னம்பலமும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த சீசனிலும் 90 ஸ் நடிகரான ராம்கி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது.

-விளம்பரம்-
Advertisement