நான் வெளிய வந்ததுக்கு காரணம் இதான், எனக்கு ஏற்கனவே அது தெரியும் – அனிதா சம்பத்.

0
2308
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்ளுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் அனிதா சம்பத்தும் ஒருவர். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தர்பார், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு முன்பாக இவருக்கென்று சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

anitha

ஆரம்பத்தில் இவருக்கு பல ஆதரவுகள் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு ஹேட்டர்ஸ்களும் அதிகமானார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் சண்டை போடாதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இவருக்கு ஆதரவாக பல இடத்தில் இருந்த ஆரி மற்றும் சனம் ஷெட்டியிடம் கூட அனிதா சம்பத் சண்டையிட்டு இருக்கிறார். அதிலும் இவர் வெளியேறிய வாரத்தில் இவர் ஆரியிடம் சண்டையிட்டது தான் இவருக்கு குறைவான வாக்குகள் விழ காரணம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில் இவரது தந்தையும் காலமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அனிதா சம்பத் தனது ராசிர்கள் அனுப்பி இருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அளித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு ரசிகர் நீங்க பிக் பஸ்ஸில் வெளியேறியது சரியா என்று கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு அனிதா ‘ நன் வெளிய வந்ததுக்கு நான் தான் காரணம். நன் சொன்ன கருத்துக்கள் சரி, ஆனா சொன்ன விதம்தான் தப்பு. எனவேய என்னக்கு வருத்தம் இல்லை’ என்று கூறியுள்ளார். மேலும், அந்த வாரம் நான் வெளியேபோகணும்னு தயாராகிட்டேன் என்றும் ஆனால் இன்னுமும் கேமே அடுத்தவங்க, செப் கேம் ஆடறவங்க, ஒப்பீனியன் வேகத்தவங்க எல்லாம் உள்ள இருக்காங்கனு தோணுச்சு என்று கூறியுள்ளார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

Advertisement