விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும். அதிலும் கடந்த வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
பொதுவாக இறுதி போட்டியின் போது கமல், இறுதி போட்டியாளர் அனைவர்களுக்கும் பரிசுகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் இறுதி போட்டிக்கு வந்த ஆரி, பாலாஜி, சோம் சேகர், ரியோ, ரம்யா ஆகிய ஐவருக்கும் கமல் பரிசு கொடுத்துள்ளார். அதில் ஆரிக்கு Pen மற்றும் டைரியையும், பாலாஜிக்கு Dumbbells சையும், ரியோவிற்கு டென்ட்டையும், சோம் சேகருக்கு drum ஐயும், ரம்யாவிற்கு இயற்கை விதைகளையும் அளித் இருந்தார் கமல்.
ரியோவிற்கு கமல் டென்ட்டை கொடுக்க முக்கிய காரணம், ரியோ பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் வெளியில் வந்ததும் அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டு நன்றாக தூங்கியதும் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ட்ரெக்கிங் போகவேண்டும் என்று கூறியிருந்தார்.அதே போல தற்போது ரியோ ட்ரெக்கிங் சென்றுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘TO ANOTHER WORLD’ என்று விடியோவை பதிவிட்டுள்ளார்.