ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில முன்னாள் போட்டியாளர்களின் சிபாரிசோடு யாரவது கலந்துகொள்வார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் பாஸ் வீட்டில் இருந்த போதே பாலாஜி முருகதாஸும் யாசிகாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல பாலாஜி முருகதாஸ், யாஷிகா ஆனந்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சயில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி உள்ள ‘கனக்ஷன்ஸ் ‘ நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ள வீடியோ ஒன்றும் அப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது .
இதையும் பாருங்க : முதல்ல நான் என்னை மாத்திகிட்டு – விவகாரத்துக்கு பின் சமந்தா போட்ட முதல் பதிவு.
அதாவது யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுடன் கலந்து கொண்டு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்ட நிரூப்பும் யாஷிகாவிற்கு மிகவும் நெருக்கம் தான். நிரூப் ஆனந்த குமார் வேறு யாரும் இல்லை கடந்த சில வருடங்களுக்கு முன் யாஷிகா, குடி போதையில் பைப்பில் இருந்து லைவ் போட்ட போது யாஷிகாவிற்கு லிப் லாக் கொடுத்தவர் தான் இந்த நிரூப்.
இவர் சென்னையில் madras more என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் தன்னை பற்றிய Avயில் இவர் பேசிய போது தனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் வொர்க் அவுட் ஆகவில்லை என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அது யாஷிகா தானா என்பது தெரியவில்லை.