முதல்ல நான் என்னை மாத்திகிட்டு – விவகாரத்துக்கு பின் சமந்தா போட்ட முதல் பதிவு.

0
6074
samantha
- Advertisement -

நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் இன்று முடிவுக்கு வந்து உள்ளது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-27-988x1024.jpg

இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.

- Advertisement -

இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி ‘ என்ற நாகர்ஜுனாவின் குடும்ப பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் ‘S’ என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவகாரத்து சர்ச்சை வைரலானது.மேலும், வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நாக சைதன்யா – சமந்தா ஜோடி தங்களின் நான்காவது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் சமந்தா தனது விவகாரத்து செய்தியை அறிவித்து ஷாக் கொடுத்தார்.

இந்த நிலையில் விவகாரத்து அறிவித்த பின்னர் நடிகை சமந்தா முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஒரு பாடலின் வரியை போட்டுள்ளார். அதில், நான் இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதும் பேட்டிலேயே படுத்துகொண்டு இருப்பதை விட்டுவிட்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பது போல அந்த பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement