ஷிவின் மட்டும் வின் பண்ணி இருந்தா – Vj கதிரவன் அளித்த பேட்டி

0
641
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரண்டாவது இடத்தில் விக்ரமனும், மூன்றாவது இடத்தில் ஷிவினும் வந்தனர். மேலும் அமுதவாணன் இரண்டாவதாக வந்த 20 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆனால் முதலாவதாக வந்த 3 லட்சம் பணப்பெட்டியை கதிர் எடுத்துக்கொண்டு சென்றார். இதனால் கதிரை நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாக்களில் கலாய்த்து வந்தனர்.

-விளம்பரம்-

இப்படி பட்ட நிலையில் தான் பிக் பாஸ் கதிர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் ஷிவின் பற்றியும், அசீம் டைட்டில் பெற்றது பற்றியும் பேசியுள்ளர். அவர் பேசுகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு வெளியில் வந்த பிறகு சூழ்நிலைக்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. என்னுடைய வீட்டிற்கு வந்தவுடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடிவு செய்தேன். அதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் கூட பேச என்னால் முடியவில்லை.

- Advertisement -

டைட்டில் என்னுடைய நோக்கம் கிடையாது :

என்னுடைய நோக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதில்லை. நான் பணப்பெட்டி வந்தவுடன் அதை எடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று முன்பே முடிவு செய்துவிட்டேன். அதுதான் என்னுடைய நோக்கமே தவிர டைட்டில் பெறுவது என்னுடைய நோக்கம் கிடையாது. அதனால் தான் பணம் அதிகரிக்கும் வரை காத்திருக்காமல் உடனே பணப்பெட்டி வந்தவுடன் எடுத்துவிட்டு வெளியில் வந்து விட்டேன். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் ரசிகர்கள் சிலர் உங்களைப் போலத்தான் என் மகனையும் வளர்க்க நினைக்கிறேன் என்று கூறியது நான் வெற்றி பெற்றதற்கு சமமாக அதை நினைக்கிறன் என்று கூறினார்.

அசீமின் வெற்றி ஷிவினின் தோல்வி :

மேலும் அசீம் வெற்றி பெற்றதை பற்றி பேசிய கதிர் “அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டு தான் அவர் வெற்றி பெற்றுள்ளார் அதனால் அவரை எதுவும் சொல்ல முடியாது. அதேபோல மற்றவர்களும் பிக் பாஸில் அவர்களால் முடிந்த அளவிற்கு விளையாடியுள்ளனர். எனவே அனைவரும் வெற்றியாளர்கள் தான். மேலும் ஷிவின் பற்றி கூறிய கதிர் `ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் என கூறினார்.

-விளம்பரம்-

மிக்சர் கேங் பற்றி :

மேலும் அவர் பேசுகையில் தன்னை மிக்சர் கேங் என்று கூறியதற்கு தான் வருத்தப்படவில்லை என்றும், இரண்டு பேருக்கு இடையே சண்டை வரும்போது அந்த சண்டையை அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்குத்தான் அந்த சூழ்நிலை என்னவென்று தெரியும், எனவே தான் அந்த விஷியத்தில் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் பிக் பாஸிற்கு பிறகு பல படங்களிலும், இனைய தொடர்களிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து மக்களை ரசிக்க வைப்பேன் என்றும் கூறினார் பிக் பாஸ் கதிரவன்.

Advertisement