விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 33 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அதிலும் விஜே பார்வதி முகத்திரையை கிழித்திருக்கிறார்கள். ஐந்தாவது வாரத்தினுடைய கேப்டனாக திவ்யா கணேசன் தான் வெற்றி பெற்றிருந்தார். இந்த வாரம் ஆஹா ஓட்டல் என்ற டாஸ்க் சென்றது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, மஞ்சரி, தீபக் தான் சிறப்பு விருந்தினராக இந்த டாஸ்கில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
அவர்களை போட்டியாளர்கள் எப்படி எல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு பாய்ண்ட்ஸ் வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், கெஸ்ட் வந்த முதல் நாளில் கடுப்பேற்றும் அளவிற்கு போட்டியாளர்கள் செய்திருக்கிறார்கள். இதனால் கெஸ்டுகள் அனைவருமே அப்செட் ஆகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செய்த போட்டியளராக பார்வதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

டபுள் எவிக்ஷன்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் தான் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் வியானா, வினோத், பிரவீன், கம்ருதீன், ரம்யா, fj ,சபரி, கெமி, விக்ரம், பார்வதி, துஷார், திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து முதலில் ரம்யா ஜோ தான் வெளியேற இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாவதாக துஷார் போக இருக்கிறார்.






