நயன்தாராவைப் போல மென்மையாக சிரித்து, ஸ்டைலாக அழுது நடித்திருக்கலாமே – இரண்டாம் இடம் குறித்து விஜய் டிவி பிரபலம் போட்ட பதிவு.

0
27788

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

popular vijay tv celebrity on biggboss4tamil விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு வைரல்

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. இப்படி ஒரு நிலையில் இரண்டாம் இடத்திற்கு யார் தகுதியானவர் என்று விஜய் டிவியின் முன்னாள் தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதில், என் பார்வையில், இரண்டாவது இடத்திற்கு சனம், அல்லது அனிதா மட்டுமே தகுதியானவர்கள். இந்த விளையாட்டை விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக விளையாடியவர்கள்.முகத்துக்கு நேரே கேட்டார்கள். புறம்பேசவில்லை. அணி சேர்த்துக்கொண்டு பிறரைப் பழிவாங்கவில்லை. பித்தலாட்டம் செய்யவில்லை. கோழைகளாக இல்லை. விதிமுறைகளை மீறவில்லை. அனிதாவின் அழுகையும், சிரிப்பும் வெறுப்பாக இருந்தது என்பது விளையாட்டுக்கு முரண் இல்லையே. ஒருவர் தன்னை அழகாக காட்டிக்கொள்ள நடிக்க, அதுவும் ஒரு பெண்ணுக்கு, எவ்வளவு நேரம் ஆகும்? நயன்தாராவைப் போல மென்மையாக சிரித்து, ஸ்டைலாக அழுது நடித்திருக்கலாமே!

இயல்பாகத்தானே இருந்தார்?சனம், தன்னை உள்ளடக்கிய பிரச்சனைகளில் தீர விசாரிக்கிறதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேவையில்லாத பாச அணிகளை உருவாக்கவோ, அதில் சிக்கிக்கொள்ளாமலோ எல்லோருடனும் இனிமையாக, யதார்த்தமாகத்தானே பழகினார்.இந்த இருவரும் எந்த விதிமுறைகளை எத்தனை முறை மீறினார்கள்? இந்த விளையாட்டில் முன்னணியில் நின்று (எதுவுமே பங்களிக்காத சில மக்குணிகளைப் போல இல்லாமல்) விளையாடியவர்கள் இந்த இருவர் மட்டுமே!

-விளம்பரம்-
Advertisement