மகேஸ்வரி போனால் என்ன அவரையே தூக்கி சாப்பிடும் அளவு Wild Cardல் என்ட்ரி கொடுக்க இருக்கும் சர்வைவர் பிரபலம்.

0
364
vjparvathy
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் வைல்டு கார்டு என்ட்ரி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்து வாரம் முடிந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-
mahi

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அடுத்து என்ன வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார்.

Vjparvathy

பிக் பாஸ் எவிக்ஷன்:

பின் அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறி இருந்தனர். நான்காவது எவிக்ஷனில் மகேஸ்வரி வெளியாகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் ஃபேக்டரி டாஸ்க் குறித்து பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். இப்படி 21 பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நான்கு பேர் எலிமினேட் ஆகி தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டினுள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக யார் வரப் போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

வைல்டு கார்டு என்ட்ரி:

அதில், ஜிபி முத்து மீண்டும் நிகழ்ச்சியில் களம் இறக்கப்படலாம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால், பிக் பாஸ் அவரை கூப்பிடப்போவது இல்லை. அதே சமயம் அசல் கோளாறு வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிக் பாஸ் புது முகங்களை களமிறக்க முடிவு செய்து இருப்பதாக தெரிய வருகிறது. இது குறித்து பிரபலங்களிடம் பிக் பாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விஜே பார்வதி:

அந்த வகையில் பிரபல விஜே பார்வதி வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பின் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. யார் உள்ளே செல்ல போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement