மும்தாஜை மோசமாக திட்டிய சென்ராயன்.! அடம்பிடித்த மும்தாஜ்.! விஜய்யால் வந்த சண்டை

0
575
Mumtaz-Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல புதிய டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் டாஸ்க் அடிப்படையில் வீட்டில் உள்ள சில இடங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் ஆக்கரமித்துள்ள அணி கூறும் டாஸ்க்கை செய்த பின்னரே எதிரணியால் ஆக்கரமிக்கபட்ட இடத்தை பயன்படுத்த முடியும்.

-விளம்பரம்-

mumtaj

- Advertisement -

இந்நிலையில் கார்டன் ஏரியாவில் உள்ள கழிவறை பகுதியை மும்தாஜ் தலைவியாக உள்ள மஞ்சள் அணி ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. நேற்று (ஜூலை 26) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீல அணியில் இருக்கும் சென்ட்ராயன் கழிவறையை பயன்படுத்த சென்றதால் அவருக்கு மும்தாஜ், விஜய் நடித்த கத்தி படத்தில் இடம்பெற்ற ‘செல்பீ புள்ள ‘ பாடலை 5 முறை பாடும்படி டாஸ்க் கொடுத்தார்.

ஆனால், அதில் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் இடம்பெறுவதால் சென்றாயனிற்கு அதனை பாட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சென்ட்றாயன் என்னை அதிகம் சோதிக்காதீங்க, எனக்கு சிறுநீர் அவசரமாக வருகிறது. நான் இங்கயே போயிடுவேன்’ என்று மும்தாஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மும்தாஜை ‘அவங்க பெண் உருவத்தில் ஒரு ஆம்பளை’ என்றும் திட்டி தீர்த்தார். ஆனால், மும்தாஜ் அதனை எதுவும் கண்டுகொள்ளாமல் டாஸ்க் செய்தால் தான் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று அடாவடி செய்தார்.

-விளம்பரம்-

sendrayan

சென்ட்றாயன் பட்ட அவதி பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. இதற்கு முன்னாள் மும்தாஜ், ஷாரிக் சொன்ன பல டஸ்கை செய்யமாட்டேன் என்று பல முறை கூறியிருந்தார். அவருக்கு ஏற்ற டாஸ்க்கை கொடுத்த பின்னரே மும்தாஜ் ஏற்றுக் கொண்டார். ஆனால், சென்ராயனை மட்டும் தான் செல்லும் டாஸ்கை தான் செய்ய வேண்டும் என்று அடாவடி செய்தது சென்றாயனை வேறு விதாமாக தான் பிக் பாஸ் வீட்டில் வழி நடந்துகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது.

இந்த நிகழ்ச்சி ஆர்மபித்த நாளில் இருந்தே சென்ட்றாயனை மற்ற போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் தரம் தாழ்த்தியே வழி நடத்தி வருகின்றனர். சென்றாயனை தான் பல முறை கழிவரையை கழுவும் டாஸ்கில் ஈடுபட வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று மும்தாஜ்,சென்றவனை ட்ரீட் செய்த விதத்தை பார்த்து கோபமடைந்த டேனி மிகவும் கண்டித்து பேசி ‘அவரை பார்த்தல் என்ன இளக்காரமாக தெரிகிறதா’ என்று மற்ற போட்டியாளர்களிடம் சத்தம் இட்டுக்கொண்டிருந்தார்.

Advertisement