மா.கா.பா-வால் மலர்ந்த காதல்..! சென்ட்ராயன் ருசிகரமான பேட்டி.!

0
264
mkp

பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும்,பரணியும் கலந்த கலவையாக, பிக் பாஸ் வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்’ வீட்டில் முதல் நாள் இருந்த சென்றாயனுக்கும், இப்போதிருக்கும் சென்றாயனுக்கும் நிறைய வித்தியாசங்கள்.

sendu

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பங்குபெருவதற்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றிருந்தார் சென்ராயன். அதே போல சென்ராயன், கயல்விழி என்ற பட்டதாரி ஒருவரைத்தான் நீண்ட வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்ராயன் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி கயல் விழியை எங்கு சந்தித்தேன் என்பது குறித்து சென்ராயன் குறிப்பிட்டுள்ளார்.

சென்ராயன் தனது மனைவி கயல்விழியை ஒரு படப்பிடிப்பின் போது தான் சந்தித்துள்ளளார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகரான மா க ப ஆனந்த் நடித்த “பஞ்சுமிட்டாய்” படப்பிடிப்பு திருப்பூரில் நடந்த போது கயல்விழியை சந்தித்துள்ளார் சென்ராயன். பின்னர் கயல்விழி படப்பிடிப்பை பார்க்க தினமும் சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

sendu 1

நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் ஒரு சில ஆண்டுகள் “லிவிங் டு கெதர்” முறையில் வாழ்ந்துள்ளனர். பின்னர் இறுதியில் 2014 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த தகவலை ஒரு பேட்டியில் சென்ராயனே கூறியுள்ளார். மேலும், காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.