தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் சிகிரெட்டை ஊதி தள்ளும் ஷகீலா – வைரலாகும் புகைப்படம் இதோ.

0
1582
Shakeela
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்தியில் தான் பாஸ் நிகழ்ச்சி முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார்.

-விளம்பரம்-

அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சேனல் முன்னேற்றம் கண்டது. இதனால் சம்மந்தப்பட்ட சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர். ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர். ஆனால், முதல் சீசனில் என் டி ஆர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டுசென்றது போல நானியால் கொண்டு செல்ல முடியவில்லை.

- Advertisement -

தெலுங்கு பிக் பாஸ்:

இதனால் TRP ரீதியாக சேனல் தோல்வி கண்டது. பின் மூன்றாவது சீசனை தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜூனாவே வைத்து தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது. மேலும், இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள்:

இதில் பிரின்ஸ் யாவார், தாமினி, சுபஸ்,ரீ பல்லவி பிரசாந்த், ராதிகா ரோஸ், கௌதம் கிருஷ்ணா, பிரியங்கா,
ஷகிலா, நடிகை கிரண் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா உடைய புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியா பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. அதாவது, நிகழ்ச்சியில் ஷகிலா புகைப்பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஷகீலா புகைபிடிக்கும் காட்சி:

பொதுவாகவே பிக் பாஸ் வீட்டில் புகை பிடிப்பதற்கு என்று ஒரு தனி அறை இருக்கும். பெரும்பாலும் அந்த அறையில் பிரபலங்கள் புகை பிடிக்கும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்ப மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சில புகைப்படங்கள் கசிந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா புகைப்பிடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இதற்கு பலருமே ஏன் இப்படி? உங்களை நாங்கள் ஒரு நல்ல இடத்தில் வைத்து மதிக்கிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஷகீலா குறித்த தகவல்:

இதற்கு காரணம் சமீப காலமாகவே ஷகிலா மக்கள் மத்தியில் நல்ல பேரும் புகழுடன் இருப்பது தான். தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டியவர். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதன் மூலம் ஷகிலா ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

Advertisement