நான் நிறைய தப்பு பண்ணிட்டேன், 108 கிலோ ஆகிட்டேன். ஆனால், இப்போ – சக்தியின் வேதனை பேட்டி.

0
19336
sakthi
- Advertisement -

ஷக்தி அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதன் பின் பல படங்கள் நடித்து உள்ளார். ஆனால், சக்திக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவருக்கு வாய்ப்பு வரவில்லை. இடையில் இவர் குடித்துவிட்டு கார் விபத்தை ஏற்படுத்திய போது போதையில் தள்ளாடிய வீடியோ வெளியாகி இவரது பெயர் டேமேஜ் ஆனது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சக்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் என் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், அறியாமையால் நான் பல்வேறு தவறுகளை செய்துவிட்டேன் இதற்கு யார் மீதும் நான் படி போட விரும்பவில்லை சூட்டிங்கில் கூட நான் எந்த கேள்வியும் கேட்பது இல்லை அதற்கு காரணம் நான் தந்தையின் செல்வாக்கில் திமிராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள். நான் ஆரம்பத்தில் கொஞ்சம் மெச்சுரிடி இல்லாமல் போய்ட்டேன். சாப்பிடறது துங்கறது தான் இருந்தேன்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் டிடி – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.

- Advertisement -

அதே போல நான் பல படங்களை மிஸ் செய்து இருக்கிறார். களவாணி, ஆயிரம் விளக்கு, தம்பிக்கோட்டை, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களின் வாய்ப்பை இழந்துவிட்டேன். நான் கிட்டத்தட்ட 12 படத்தை நான் மிஸ் செய்தேன். அதில் 8 படம் ஹிட் ஆனது என்று கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் குறித்து பேசிய சக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியால் நான் நிறைய இழந்து விட்டேன். அந்த நிகழ்ச்சியால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மிகப்பெரிய மன அழுத்தத்தில் தான் உள்ளே சென்றேன்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எனக்கு பாதி பெண் ரசிகைகள் போய்விட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்னர் பெண் ரசிகைகள் என்னை சக்தி சார் என்று அழைப்பார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னிடம் பெண் ரசிகைகள் ஓவியா போல நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

பலரும் என்னிடம் ஓவியா போல பார்ப்பது ஓவியா போல செய்வது என்றுதான் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக நான் மிகவும் குண்டாக மாறி விட்டேன். 106 கிலோ ஆகிவிட்டேன். அதனால் தான் பேட்டிகளை கூட கொடுப்பது இல்லை. தற்போது தான் எடையை குறைத்து 88 கிலோ இருக்கிறேன். தற்போது மீண்டும் என்னை தயார் செய்து வருகிறேன். விரைவில் ஒரு நல்ல படம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Advertisement