2016 ஆம் ஆண்டு ஜி வி பிரகாஷ் நடித்த 'பென்சில்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கு ஒரு புகைபடக் கலைஞராக வர வேண்டும் என்பது தான் ஆசையாம். பின்னர் எப்படியோ சினிமா துறைக்கு வந்துவிட்டாராம். பென்சில் படத்திற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதே, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றால் கண்டிப்பாக பிரபலமடைந்து விடலாம் என்பதற்காக தான். அதனால் தான் இவரும் இந்த நிகழ்ச்சியில் பண்பெற்றுள்ளார் என்றும் சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது.
சமீபத்தில் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளரில் ஒருவரான ஐஸ்வரியாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். ஆனால், ஷாரிக் ஹாசன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்று ஷாரிக் ஹாசன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.




