ஷாரிக்கின் காதலியால் பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்.! உச்சகட்ட கோபத்தில் ஐஸ்வர்யா..?

0
957
Bigg-boss

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக்கின் ரொமான்ஸ் தான் வழிந்தோடியது. சில நாட்களுக்கு முன்னர் ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் தனது காதலை மறைமுகமாக தெரிவித்தார். அதே போல ஐஸ்வர்யாவிற்கும், ஷாரிக் மீது ஒரு விதமான ஈர்ப்பும் ஏற்பட்டிருந்தது.

Shariq-in-Servant

இருவரும் அடிக்கடி மறைமுக ரொமான்ஸ் செய்து கொண்டது ரசிகர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது. இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் என்று பலரும் அறிந்து கொண்டனர். இந்நிலையில் ஷாரிக்கின் முன்னாள் காதலி அனுப்பிய ஒரு உடையால் இவர்கள் இருவரின் காதலும் முறிந்துள்ளது.

சமீபத்தில் ஷாரிக்கின் முன்னாள் காதலி ஒருவர் ஷாரிக்கிற்கு எம்ராய்டரி போடப்பட்ட ஒரு டீ- ஷர்ட் ஒன்றை பிக் பாஸ் வீட்டிற்குள் பார்சல் அனுப்பியுள்ளார். இதனை கண்ட ஷாரிக் மிகவும் மனம் வருந்தியுள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் முன்னாள் காதலியின் நினைப்பு வந்துள்ளது.

shariq

இந்நிலையில் தன்னை ஷாரிக் ஒதுக்குகிறார் என்று எண்ணிய ஐஸ்வர்யா ஷாரிகிடம் முறுக்கிக் கொண்டு இனி பேசவே மாட்டேன் என்று கோபம் கொண்டார். மேலும், ஷாரிக்கிடம் இனிமேல் நட்புரீதியாக மட்டும் பழகு என்று கூறிய யாசிகவுடனும் சண்டைபோட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஷாரிகிற்கு முன்னாள் காதலி இருப்பதை தன்னிடம் மறைத்து விட்டார் என்று ஏமாற்றத்தில் உள்ளார் ஐஸ்வர்யா.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.