-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

வேறு மத பெண் என்பதால் திருமணத்தில் வந்த பிரச்சனை – பின்னர் இப்படி தான் திருமணம் செய்தாராம் ரியாஸ் கான்.

0
4243
riyaz

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து வந்துள்ளார். பிறகு இவர் நடிகை உமாவை திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். தற்போது ஒரு புதிய படத்திற்காக ரியாஸ் கான் அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

எப்போதும் ரியாஸ் கான் தன்னுடைய உடற்பயிற்சி விஷயத்தில் கவனமாக இருப்பார். ஏன்னா, இவர் ஒரு பாடி பில்டர் ஆவார். இவர்களுக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கான் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர் தன்னுடைய கல்யாணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய கல்யாணம் காதல் திருமணம். அதுமட்டுமில்லாமல் நாங்கள் inter-caste மேரேஜ். இதனால் இரு வீட்டிற்கும் மனஸ்தாபங்கள், கஷ்டங்கள் இருந்தது. நான் உமாவை கடத்திக் கொண்டு வந்து தான் திருமணம் செய்தேன். எங்க வீட்டில் கூட ஆரம்பத்தில் ஒழுங்கா பேச மாட்டார்கள்.

-விளம்பரம்-

எங்களுக்கு குழந்தை பிறக்க போகும் செய்தி கேட்ட பிறகு தான் அனைவரும் ஒன்றாக சேர்ந்தார்கள். எங்கள் வீட்டிலேயும் நன்றாக பேச ஆரம்பித்தார்கள் என்று கூறினார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உமா ரியாஸ்கன் கலந்து கொண்டார். பின் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news