பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவரா..! கருத்துக்கணிப்பு தகவல்

0
437
Bigg-Boss-vote

பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேற்றபடுவார் என்று மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

shariq-hassan big boss

தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான். அதில் பொன்னம்பலம், பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் பல முறை நாமினேஷனில் வந்து பின்னர் மக்களால் காப்பாற்றபட்டனர்.இதனால் இந்த வாரமும் இவர்கள் சேபாக இருக்கிறார்கள்.

மேலும், இந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் ஷாரிக் இருப்பதிலேயே கம்மியான வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக மஹத் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளாராம். மஹத் சென்ற வாரமே நாமினேஷனில் இருந்தார். ஆனால், சென்ற வாரம் வைஷ்ணவி வெளியேற்ற படுவதாக அறிவைக்கப்பட்டு சில நாட்கள் அவரை ரகசிய அறையில் வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டார்.

Vote

Shariq

ஆனால், இந்த வாரம் வாக்களிப்பின் போது மஹத் மற்றும் ஷாரிக்கிற்கு இடையே தான் போட்டி நிலவியதாக தெறிகிறது . ஆனால், ஷாரிக் கடந்த சில நாட்களாக தான் பிக் பாஸ் வீட்டில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார். மேலும், அவர் இவரால் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு ஸ்வாரஸ்யமுயம் ஏற்படவில்லை. எனவே, இந்த வாரம் ஷாரிக்கை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்று எண்ணம் தோன்றுகிறது.

மேலும்,ஷாரிக்கா, மஹத்தா என்று வரும் போது ஷாரிக்கை விட மஹத்தின் பங்களிப்பு என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் மஹத்தை ஒப்பிடும் போது ஷாரிக் ஒரு வலுவற்ற போட்டியாளராக தான் இருந்து வருகிறார். ஒருவேளை ஷாரிக்கிற்கு பதில் டேனியோ, சென்றாயானோ நாமினேஷனில் இருந்திருந்தால் கண்டிப்பாக மஹத் தான் வெளியேறி இருப்பார் என்பதில் ஆச்சர்யமில்லை.