புதிதாக துவங்கியுள்ள கவின் – ஷெரின் ரொமான்ஸ்.! முதலில் ஆரம்பித்து யார்.! வைரலாகும் குறும்படம்.!

0
4022
kavin-sherin

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞனின் முக்கோண காதல் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த பல வாரங்களாகவே கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற லாஸ்லியாவின் பெற்றோர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இதனால் இருவரும் இனி தங்களது கேமை ஒழுங்காக செய்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

அதே போல இவர்கள் இருவரும் முன்பை போல தனியாக அமர்ந்து பேசுவது ஒன்றாக அமர்வது என்று அனைத்தையும் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவின் ஷெரினிடம் மிகவும் நெருக்கமாகவும் குறும்புத்தனமும் இருந்து வருகிறார். இதனால் லாஸ்லியா வேண்டாம் என்று சொன்னதும் கவின், ஷெரின் பக்கம் திருப்தியாக பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவின் ஆர்மி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளது அதில் ஷெரின் தான் கவின் இவ்வாறு செய்ய தூண்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத்.! தாலி எங்கே என்று கேட்ட நெட்டிசன்கள்.!

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாஸ்லியாவிடம் கவின் எதற்காக எதை நம்ப வேண்டும் என்று தெரியவில்லை என்று கமலிடம் சொன்னாய் என்று கேட்டிருந்தார். அதற்கு லாஸ்லியா நான் உன்னை சொல்லவில்லை என்று மழுப்பலான பதிலை கூறியிருந்தார். மேலும், முன்பை போல கவினிடம் லாஸ்லியா நெருக்கமாக இருப்பதும் இல்லை .இது கவினுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, மீண்டும் லாஸ்லியாவை தன் பக்கம் இழுக்கவே இதுபோல் செய்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் உண்மையில் ஷெரீன் இந்த விஷயத்தை ஆரம்பிக்கவில்லை என்றும் காலை 10 மணிக்கு அவரிடம் இதுபோல நடந்து கொண்டுள்ளார் கவின், ஆனால் இந்த வீடியோ 12 மணிக்கு பதிவாகியுள்ளது.எனவே, கவின் தான் இந்த புதிய ரொமான்ஸை துவங்கி இருக்கிறார் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல இந்த உரையாடலை பார்க்கும்போது கவின் இதற்கு முன்பாக ஏதோ சொல்லியிருக்கிறார் அதற்குத்தான் ஷெரின் பதில் அளித்துள்ளார் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement