பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் ஷெரின் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்.!

0
5337
sherin
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றதோ அதைவிட அதிகமாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.ஆனால், நடுவுல பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும் எல்லாத்தையும் தட்டி தூக்கிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி 3.பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஓவியாதான்.ஆனால்,தற்போது அந்த எண்ணத்தை முறியடித்து போய் கொண்டிருக்குது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.அதுமட்டுமில்லாமல் ஓரிரு சில மணி நேரத்தில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்து விடும்.

- Advertisement -

இதை ஆர்வத்துடனும் ஆவலுடனும் தமிழக மக்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளரும் டாப் 10 தொகுப்பாளருமான சுரேஷ் முகென் தான் வின்னர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். மேலும், இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகமாக சேர் செய்து கொண்டு வருகின்றனர் ரசிகர்கள். உண்மையிலேயே முகின் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வாங்குவதற்கு 100% தகுதியானவர் என்றும் பேசப்பட்டு வருகிறார்கள்.

sherin

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சாண்டி,முகென் , லாஸ்லியா, ஷெரின். இவர்கள் நான்கு பேரில் யார்? பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் கடந்த சீசன் வெற்றியாளரான ரித்விகா கோப்பையுடன் சென்றார். பின்னர் மேடையில் இருந்த கமல் இந்த வாரம் ஷெரின் வெளியேற்றபட்டதாக அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் அவரை ரித்விகா ஷெரீனை தன்னுடனே அழைத்து வந்தார். இதுவரை ஒளிபரப்பாகி வந்த காட்சிகள் அனைத்தும் நேற்றே எடுக்கப்பட்டவை என்பதும். குறிப்பிடத்தக்கது தற்போது இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பதற்கான படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இந்த சீசன் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

Advertisement