வாழ்வில் தந்தையை ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ள பிக் பாஸ் பிரபலம் அனுபவித்த கொடுமை..

0
6865
Bigg-Boss-4
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். இவர் வடிவழகி ஆக இருந்து பின்னர் திரையுலக நடிகையுமானர். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறைக்கு ‘தர்ஷன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். தற்போது தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றார். அதுமட்டு இல்லைங்க பிக் பாஸ் வீட்டில் சூப்பராக விளையாடினார்.தன்னுடைய வீட்டில் எப்படி இருந்தாரோ, அதே மாதிரி தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்று பலரும் ஷெரீனை பாராட்டினார்கள்.

-விளம்பரம்-
sherin-mom

அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் கூட அவரை வாழ்த்தி வந்தார். இந்நிலையில் தற்போது சினிமா துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இப்போட்டியின் இறுதி கட்டத்திற்கு 4 பேரை தேர்வு செய்தார்கள். அதில் ஷெரினும் ஓருவர்.கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். மேலும், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக முகின் ராவ் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சாண்டி இரண்டாம் இடத்தையும், லாஸ்லியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், செரினுக்கு குறைவான அளவில் வாக்குகள் பதிவானதால் அவர் கடைசி நிமிடங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி நான்காம் இடத்தை பெற்றார்.

இதையும் பாருங்க : இதனால் தான் ரசிகர் மன்றம் வேண்டாம் என்றேன்.. இயக்குனரிடம் ரகசியதை கூறியுள்ள அஜித்..

- Advertisement -

“அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். ஆனால்,தற்போது இந்த பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியும், அனைவரிடமும் அன்பு பகிர்ந்து இருந்தார் என்பதால் பிக்பாஸ் குழு ‘பெஸ்ட் படி(best buddy)’ என்ற விருதை வழங்கியது. இப்படி சந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும் செரின் ஷிரிங்கார் வாழ்வில் மிகப்பெரிய அளவில் யாருக்கும் நடக்காத கொடுமையான சம்பவங்களும் நடந்துள்ளது. செரின் அப்பா மூன்று வயதிலேயே அவரை விட்டுட்டு போய் விட்டார் என்ற தகவல் அனைவர்க்கும் தெரிந்தது . அதோடு ப்ரிஸ் டாஸ்கில் செரின் தன் அம்மாவிடம்,எனக்கு அப்பா இருந்தால் நல்லா இருக்குமே? என்று ஏக்கத்துடனும் மன குமறலுடன் கேட்டது ரசிகர்கள் மனதை பதற வைத்தது.

அதுமட்டும் இல்லைங்க ஷெரீனுக்கு எப்பவுமே அவங்க அப்பா நியாபகம் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு அவங்க அம்மா பாசமாக இருப்பார்கள். ஆனால், இந்த பிக்பாஸ் வீட்டில் வந்து சேரன் சார் தன்னுடைய குழந்தைகளுடன் பழகும் விதத்தையும் காட்டும் அன்பையும் பார்த்து அவருடைய மனதில் அப்பா வேண்டும் என்ற ஏக்கம் தோன்றியது. ஆண் குழந்தை வேண்டும் என்ற ஒரு முட்டாள் நம்பிக்கையில் ஒரு அழகான தேவதையை மறந்து விட்டார் என்ற கருத்துக்கள் வலைதளங்களில் பரவி இருந்தது . இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் மூலமாவது செரின் அப்பா திரும்ப வந்து சேர வேண்டும் என்ற கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள்.அது தற்போது உண்மையாகி விட்டது.

-விளம்பரம்-

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய அப்பா குறித்து கூறியுள்ளார். அது என்னன்னா! ஒரு முறை ஸ்கைப் மூலம் என்னுடைய தந்தையை நான் பார்த்தேன். அவர் இப்போது ஈரானில் உள்ளார். ஆனால், என்னை சந்திக்க இன்னும் வரவில்லை. அதோடு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். நான் இப்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement