மீரா மிதுனை அசிங்கபடுத்திய ஷெரின்.! அவமானத்தில் மீரா செய்த விஷயம்.! இத பாத்தீங்களா.!

0
68787
sherin
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 103 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் ரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தனர். இந்த நிலையில் நேற்றய நிகச்சியில் பிக் பாஸ் அழைத்திருந்த்தால் பிளாஸ்மா டிவி முன்பாக போட்டியாளர்கள் அனைவரும் அமர சென்றனர். அப்போது சாக்க்ஷி மற்றம் மீரா அருகருகே அமர்ந்தினர். அப்போது ஷெரின் சாக்க்ஷி அருகில் அமர்வருவதற்காக வந்தார் .

-விளம்பரம்-

இதனால் மீரா மீதும் கொஞ்சம் தள்ளி அமர்ந்தார், முதலில் மீரா மிதுன் அருகில் கொஞ்சம் தயக்கத்துடன் அமர்ந்த ஷெரின் பின்னர் எழுந்து நின்று மீராவை பார்க்க பிடிக்காது என்பது போல சாக்க்ஷி பக்கம் திரும்பி நின்று அமர்ந்தார். இதனால் மீராவிற்கு கொஞ்சம் சங்கடமாக போய்விட்டது. இதனால் மீரா மிதுன் அங்கிருந்து எழுந்து மற்றுமொறு முனையில் கடைசியில் அமர்ந்திருந்த சேரன் அருகில் சென்று அமர்ந்தார்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வந்தே போதிலிருந்தே இவருக்கும் சாக்க்ஷி மற்றும் அபிராமிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது . சாக்க்ஷியிடம் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருந்ததால் ஷெரினும் மீரா மிதுனிடம் அவ்வளவாக பேச்சு கொடுப்பதே இல்லை. அதிலும் சேரன் சர்ச்சைக்கு பின்னர் பெண் போட்டியாளர்கள் யாரும் மீராவிடம் அவ்வளவாக கண்டு கொல்வதில்லை.

மீரா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரை யாரும் பெரிதாக கண்டு கொண்டது போல தெரியவில்லை. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் மீரா மிதுன் அளித்திருந்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் டைட்டிலை சாக்க்ஷி, அபிராமி, ஷெரின் மட்டும் வென்றுவிடவே கூடாது என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement